வழிபாடு

திருப்புகழ் போற்றும் சிக்கல்

Published On 2023-07-07 08:38 GMT   |   Update On 2023-07-07 08:38 GMT
  • திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.
  • திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

சிக்கல் சிங்காரவேலவர் கோவில் முருகப் பெருமானின் அறிவிக்கப்படாத 7-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

விஸ்வாமித்திரர், அகத்தியர், கார்த்தியாயனர், நாரதர், முசுகுந்த சக்கரவர்த்தி ஆகியோர் இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர்.

'கன்னல் ஒத்த மொழிச் சொல்' எனத் தொடங்கும் திருப்புகழில் சிக்கல் சிங்கார வேலவரின் சிறப்புகளும், சிக்கல் தலத்தின் பெருமைகளும் கூறப்படுகின்றன.

'அற்ப குணம் படைத்தவர்கள் பக்கம் என் மனதை செலுத்தவிடாமல், இயல், இசை, நாடகம் என்று முத்தமிழில் விருப்பம் கொண்டவனாக விளங்கும் நீ, எனக்கு அருள் புரிவாயாக!

அரக்கர்களின் தலைகளை பூமியில் உருளச் செய்யும் வீரம் கொண்டவனே!

கொடிய பாம்பின் விஷத்தைப் போன்ற மனம் கொண்ட சூரனை, வெற்றி காண வேலாயுதத்தை உடையவனே! செம்மை குணம் கொண்ட பெரியோரின் உள்ளத்தில் வீற்றிருக்கும் சிக்கல் சிங்கார வேலவரே!'

- என்று தனது திருப்புகழில் சிங்கார வேலனைப் போற்றிப் புகழ்கிறார் அருணகிரிநாதர்.

இங்கு வரும் பக்தர்கள், 'சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் போர் முடித்து சிக்கல் தவிர்க்கின்ற சிங்கார வேலவனை நித்தம் பாடுவோம்' என்று கூறியும், திருப்புகழைப் பாடியும் தங்கள் வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.

Tags:    

Similar News