வழிபாடு

சிக்கல் சிவாலயத்தில் உள்ள பெருமாள்

Published On 2023-07-13 06:57 GMT   |   Update On 2023-07-13 06:57 GMT
  • இத்தல பெருமாள் “கோலவாமனப் பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
  • நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும்.

சிக்கல் சிவாலயத்தில் சைவ, வைணவ பேதமில்லாமல் அமையப்பெற்றுள்ள தனிக்கோவிலில் கோலவாமனப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிப்பதும், ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருவதும் குறிப்பிடத் தக்கவையாகும்.

பெருமாள் தல வரலாறு:

ஒரு முறை தேவர்கள் அசுரகுலத்தை சேர்ந்த மகாபலி சக்கரவர்த்தியால் தங்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்து மகாவிஷ்ணுவின் திருவடியில் விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள்.

அதற்காக திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இங்கு வந்து இத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவனை வழிபட்டு அசுரகுரு சுக்ராச்சாரியார் அருள் பெற்ற மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக புராணங்கள் வாயிலாக கூறப்படுகிறது.

எனவே இத்தல பெருமாள் "கோலவாமனப் பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆதலால் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள சிவனை, மகாசக்தி, முருகன், பெருமாள் மற்றும் அனுமனையும் தரிசனம் செய்பவர்களுக்கு எந்த ஒரு துஷ்ட சக்திகளின் பாதிப்பும் ஏற்படாது என்பது ஐதீகம்.

நவநீதேஸ்வரர் கோவிலில் தினசரி ஆறு கால பூஜைகள் நடைபெறும். இவ்வாலயத்தில் வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும் இத்தல இறைவன் வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்.

Tags:    

Similar News