வழிபாடு
சூரிய கிரகணத்தையொட்டி திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி
- ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது.
- கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது சூலப்பாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
சூரிய கிரகணத்தையொட்டி கோவில் நடைகள் சாத்தப்பட்டன. கிரகணம் முடிந்தபிறகு கோவில் திறக்கப்பட்டதும் சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அந்தவகையில் திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பர் கோவில் மூலவர் சுயம்பாக இருப்பதனால் அவை கைலாயத்திற்கு நிகரானவையாக கருதப்படுகிறது. கதவு சாத்தப்படாமல் சூரிய கிரகணம் நடைபெறும்போது புஷ்பமண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலப்பாணிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், சூலப்பாணியை மேளதாளம் முழங்க சன்னதிக்கு கொண்டு சென்று ஐயாறப்பர் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.