நாகர்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தேர்பவனி
- புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடைபெற்றது.
- தேரானது திருத்தலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பவனி வந்தது.
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் சாலையில் அமைந்துள்ள புனித அல்போன்சா திருத்தலத்தில் 10-ம் நாள் திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தக்கலை மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்து அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் புனித பயணமாக அல்போன்சா திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.
விழாவில் காலை 9 மணிக்கு தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்தந்தை தோமஸ் பெவ்வத்துபறம்பில் தலைமையில் புனித அல்போன்சா சிறப்பு நவநாள் நடைபெற்றது. 9.30 மணிக்கு தக்கலை மறைமாவட்ட ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு தேர்பவனி நடைபெற்றது. தேரானது திருத்தலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் பவனியாக வந்தது.
மதியம் 1.30 மணிக்கு நேர்ச்சை விருந்து, புனித அல்போன்சா சிறப்பு நவநாள், ஆடம்பர கூட்டு திருப்பலி, திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பேரருட்தந்தை சனில் ஜோண் பந்திச்சிறக்கல், துணை பங்குத்தந்தை டோஜி செபாஸ்டின் தலைமையில் பங்கு மக்கள் செய்திருந்தனர்.