புலியூர்குறிச்சி மறைசாட்சி புனித தேவசகாயம் திருத்தல திருவிழா இன்று தொடங்குகிறது
- இந்த விழா 3 நாட்கள் நடக்கிறது.
- அன்பு விருந்து நடக்கிறது.
புலியூர்குறிச்சி முட்டிடிச்சாம்பாறை மறைசாட்சி புனித தேவசாயம் திருத்தல திருவிழா இன்று(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. விழாவில் இன்று மாலை 4 மணிக்கு திருக்கொடி பவனி, தொடர்ந்து முளகுமூடு பசிலிக்கா அதிபர் டோமினிக் கே.தாஸ்தலைமை தாங்கி கொடியேற்றி வைக்கிறார்.
திருத்தல அதிபர் மரிய ராஜேந்திரன் முன்னிலை வைகிக்கிறார். திருப்பலிக்கு அப்பட்டுவிளை பங்குதந்தை மைக்கேல் அலோசியஸ் மறையுரையாற்றுகிறார். நாளை(வெள்ளிக்கிழமை) காலை குழித்துறை மறை மாவட்ட பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜெலஸ்டின் ஜெரால்டு தலைமையில் திருப்பலி, பங்குத்தந்தை சுரேஷ்குமார் மறை உரையாற்றுகிறார்.
14-ந்தேதி காலை 9 மணிக்கு பங்குதந்தை ஜெயக்குமார் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி, திருத்துவபுரம் மறை மாவட்ட முதல்வர் அருட்பணியாளர் புஷ்பராஜ் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து உதயகிரிகோட்டையில் அமைந்துள்ள டச்சு தளபதி டிலனாய் குடும்ப கல்லறை தோட்டம் அர்ச்சித்தல், 11 மணிக்கு அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் மரிய ராஜேந்திரன், பங்கு பேரவை உதவி தலைவர் புரோடி மில்லர், செயலாளர் ஜெகதா, பொருளாளர் ஜான்பெனட், துணைச் செயலாளர் கண்ணதாசன் மற்றும் பங்குபேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.