வேங்கோடு புனித சவேரியார் ஆலய பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- இந்த விழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
- 23-ந்தேதி ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
வேங்கோடு புனித சவேரியார் ஆலய பெருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு வளனூர் பங்கு அருட்பணியாளர் காட்வின் செல்வஜஸ்டஸ் தலைமையில் பங்கு மக்கள் கலந்து கொள்ளும் கொடிபவனி நடக்கிறது.
அதைதொடர்ந்து திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல் அருட்பணியாளர் ராஜன் மறையுரையாற்றுகிறார். சிறப்பு விருந்தினராக பெதனி அருட்தந்தையர்கள் கிறிஸ்டோபர், ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து, மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான 22-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேலராமன்புதூர் பங்கு அருட்பணியாளர் மரிய சூசை வின்சென்ட் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறார். பூட்டேற்றி அருட்பணியாளர் ஷிஜின் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு வேங்கோடு வட்டார முதல்வர் பேரருட்பணியாளர் பெஞ்சமின் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெறுகிறது. கிட்ஸ் சமூக சேவை அமைப்பு இயக்குனர் ஜாண் மைக்கேல் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, நள்ளிரவு 2 மணிக்கு கருமாத்தூர் புனித அருள் ஆனந்தர் கலைக்கல்லூரி துணை முதல்வர் அருட்பணியாளர் அன்பரசு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
10-ம் திருவிழாவான 23-ந்தேதி காலை 9 மணிக்கு மறைமாவட்ட பொருளாளர் பேரருட்பணி அகஸ்டின் தலைமை தாங்கி பாதுகாவலர் பெருவிழா கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார். திருச்சி புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் சேவியர் பெனடிக்ட் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து 11 மணிக்கு ஆடம்பர தேர்பவனி, அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு இசை இரவு ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ் தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள் மற்றும் பங்குமக்கள் செய்து வருகிறார்கள்.