புனித சவேரியார் பேராலயத்தில் கொடியிறக்க நிகழ்ச்சி
- ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடந்தது.
- புனிதர்களின் திருப்பண்டம் முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் 10 நாள் திருவிழா கடந்த 3-ந் தேதி முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து கொடியிறக்கம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. கோட்டார் மறைவட்ட முதன்மை அருட்பணியாளர் சகாயஆனந்த், பேராலய பங்குதந்தை ஸ்டான்லி சகாயசீலன், இணை பங்குதந்தை ஆன்றோ ஜெரால்பின் ஆகியோர் கொடியிறக்கி வைத்தனர்.
பின்னர் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர் வழங்கினர். அதன்பிறகு புனிதர்களின் திருப்பண்டம் முத்தமிடும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த புனிதர்களான சவேரியார், தேவசகாயம் ஆகியோரின் திருபண்டத்திற்கு முத்தமிட்டனா்.
தொடர்ந்து ஆலய வளாகத்தில் சமபந்தி விருந்து நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு பேரவை துணை தலைவர் ஜேசுராஜா, செயலாளர் ராஜன், துணை செயலாளர் ராஜன் ஆராச்சி, பொருளாளர் ராபின் ஆகியோர் செய்திருந்தனர்.