தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா கொடியேற்றம்
- 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனி நடக்கிறது.
- 10-ம் திருவிழா அன்று ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது.
விழாவில் பங்கு தந்தைகள் இருதயசாமி, வினித், மார்ட்டின், சத்திஸ்டன், உதவி பங்குதந்தைகள் பாக்கியராஜ், வின்சென்ட், பால்ரோமன், சவரிராஜ் மற்றும் அகஸ்டின், மரியஅரசு, விக்டர் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடக்கிறது.
விழாவில் 8-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நற்கருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று மாலை 6.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் சூசை நசரேன் தலைமையில் பெருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழா அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் பெருவிழா ஆடம்பர கூட்டுதிருப்பலி நடக்கிறது.