சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 8-ந்தேதி முதியோர், நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.
- 9-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.
சின்னமுட்டம் புனித தோமையார் ஆலய 10 நாள் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு மாலை 6 மணிக்கு நவநாள், திருக்கொடிப்பவனியைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி அருளுரையாற்றினார்.
திருவிழா நாட்களில் நவநாள், திருப்பலி, அருளுரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். 9-ம் நாள் திருவிழாவான வருகிற 8-ந் தேதி காலை 10 மணிக்கு முதியோர் மற்றும் நோயாளிகளுக்கான திருப்பலி நடைபெறும்.
தேர்ப்பவனி 10-ம் நாள் திருவிழாவான 9-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்த் திருப்பலிக்கு அருட்பணி மரிய செல்வன் தலைமை வகித்து அருளுரையாற்றுகிறார். காலை 7.30 மணிக்கு நடைபெறும் பெருவிழா திருப்பலிக்கு ஆலஞ்சி மறைமாவட்ட முதன்மை பணியாளர் தேவதாஸ் தலைமை தாங்குகிறார். நாகர்கோவில் தூய ஞானப்பிரகாசியார் குருமடம் அதிபர் பஸ்காலிஸ் அருளுரையாற்றுகிறார். இதனை பங்கு மக்கள், பங்குப்பேரவையினர் சிறப்பிக்கின்றனர். காலை 11 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், அருட் பணியாளர் கில்டஸ், பங்குப்பேரவை துணைத்தலைவர் அந்தோனி செபஸ்தியான், செயலாளர் தினேஷ், பொருளாளர் பிரவீன் ஆகியோர் செய்துள்ளனர்.