திருப்பதி கோவிலில் ஜன. 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம்
- திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது.
வைகுண்ட ஏகாதசி ஏற்பாடுகள் குறித்து திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் வெங்கய்ய சவுத்ரி கூறியதாவது:-
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10 முதல் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி நடைபெறும் 10 நாட்களும் சாதாரண பக்தர்களும் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்வதற்காக விஐபி பிரேக் தரிசனம், ஏழை குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்கள் உள்ளிட்டோருக்கான சிறப்பு ஆர்ஜித தரிசன சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் வைகுண்ட ஏகாதசி நாட்களில் அன்னதான பிரசாத கூடத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 63, 637 பேர் தரிசனம் செய்தனர், 24,016 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.20 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.