வழிபாடு

தெப்ப திருவிழா நடந்தபோது எடுத்த படம்.

சேரன்மாதேவி கோவில்களில் விழா: தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி

Published On 2022-12-30 07:29 GMT   |   Update On 2022-12-30 07:29 GMT
  • சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
  • பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றின் நதிக்கரையில் அமைந்துள்ளது பக்தவச்சல பெருமாள், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் நவநீதகிருஷ்ண சுவாமி கோவில்கள். இதில் பித்ரு தோஷ நிவர்த்தி ஸ்தலமாக திகழும் பக்தவச்சல பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் தீர்த்தவாரி விழா விமரிசையாக நடைபெறும்.

வியதிபாத நாளன்று அதிகாலையில் நடைபெறும் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தவச்சல பெருமாளை வேண்டினால் முன்னோர்கள் செய்த பாவங்கள் நீங்கி அவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த ஆண்டுக்கான தீர்த்தவாரி நேற்று நடந்தது.

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு பக்தவச்சல பெருமாள், நவநீதகிருஷ்ண சுவாமி, மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News