சிவாலயம் கட்டுவதால் ஒருவருக்கு ஏற்படும் புண்ணியம்!
- சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும்.
- சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால் பாவங்கள் விலகும்.
ஆலயங்களைப் பற்றி, அகத்தியர் அருளிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
* தன் வாழ்நாளில் ஒரு சிவாலயத்தை கட்டுபவன், தினந்தோறும் சிவபெருமானை பூஜித்த பலனை பெறுவான். அதோடு அவன் குலத்தில் பிறந்த சிறந்த முன்னோர்களில் நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.
* ஒருவன் சிவாலயம் கட்ட வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தாலே போதும். அவன் ஏழு ஜென் மங்களில் செய்த பாவங்களில் இருந்து விடுபடுவான். நினைத்ததுபோலவே சிவாலயம் கட்டி முடித்தால், சகலவிதமான போகங்களும் அவனை வந்தடையும்.
* கருங்கற்களைக் கொண்டு ஆலயம் எழுப்புபவர். ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு ஆயிரம் வருடம் என. சிவலோகத்தில் இருக்கும் பாக்கியத்தைப் பெறுவான்.
* ஒருவரைக் கொண்டு சிவலிங்கத்தை செய்விப்பவனுக்கு. சிவலோகத்தில் 60 ஆயிரம் வருடம் தங்கியிருக்கும் பாக்கியம் கிடைக்கும். அவனது வம்சத்தவர்களும் சிவலோகத்தை அடையும் புண்ணியம் பெறு வர்.
* சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று நினைப்பவர், தன்னுடைய எட்டு தலைமுறை முன்னோர்களை, சிவலோகம் அடையச் செய்வார். அப்படி ஒருவரால் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய முடியாவிட்டாலும், பிறர் செய்வதைக் கண்டு, 'நாமும் இதுபோல் செய்தால் நற்கதி அடையலாமே என்று நினைத்தாலே போதும். அவருக்கு முக்தி நிச்சயம்.
* எந்த நேரமும் சிவபெருமானையே மனத்தால் தியானித்து வருபவர்கள், ஈசனை மலர்களால் அர்ச்சிப்பவர்கள், சிதிலமாகிக் கிடக்கும் சிவாலயத்தைப் புதுப்பித்து நித்திய வழிபாடுகளைச் செய்விப்பவர்கள். காலையும் மாலையும் ஆலயத்தைப் பெருக்கி சுத்தம் செய்பவர்கள், சிவாலயத்தை நிர்மாணிப்பவர்கள், சிவலிங்கப் பிரதிஷ்டை செய்பவர்கள் ஆகியோரிடம் எமதர்மன் நெருங்க மாட்டார்.
* சிவாலயம் சென்று இறைவனுக்கு தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து பூஜிப்பவன். ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனை அடைவான்.
* தேய்பிறை சதுர்த்தசியில் சிவலிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால், அதுவரை செய்த பாவங்கள் விலகும்.
* பவுர்ணமி, அமாவாசை தினங்களில் சிவலிங்கத்துக்கு, அபிஷேகம் செய்து பூஜிப்பவன் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுவான்.