வழிபாடு

பிரதோஷ கால அபிஷேகத்தின் மகிமை

Published On 2024-02-02 04:47 GMT   |   Update On 2024-02-02 04:47 GMT
  • நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்.
  • சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை.

பிரதோஷம் அன்று நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேசுவரரின் இருகொம்பு களுக்கு இடையில் சிவபெருமான் திருநடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையான காலம் பிரதோஷ நேரமாகும். இது `தினப் பிரதோஷம்' எனப்படும். சிவனை வழிபட ஏற்றகாலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவராத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம்.

 பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண்ணியத்தை பெறுவதால் அதற்கு அவ்வளவு மகிமை உண்டு. பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். இந்த நாளில் நாம் சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

அதோடு நாம் எந்த அபிஷேகப் பொருளைக் கொண்டு நந்திகேசுவரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன்களும் சொல்லப்பட்டுள்ளது. அவற்றையும் பார்ப்போம்.

பால் - நோய்தீரும்

தயிர் - வளம் பல உண்டாகும்

தேன் - இனிய சரீரம் கிட்டும்

பழங்கள் - விளைச்சல் பெருகும்

பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

நெய் - முக்தி பேறு கிட்டும்

இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்

சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

எண்ணெய் - சுகவாழ்வு கிட்டும்

சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்

Tags:    

Similar News