சந்திரசேகர திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
- இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும்.
இந்த சிறப்பு பெற்ற கோவிலில் ஆண்டுதோறும் சந்திர சேகர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சந்திரசேகர திருவிழாவையொட்டி கொடியேற்றம் நேற்று நடந்தது. விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.
விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் கண்காணிப்பாளர் மணி, உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி, கோவில் குருக்கள் ஹரி கிருஷ்ண குருக்கள், மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் குருக்கள் செய்து வருகின்றனர்.