வழிபாடு

திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா 2-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-11-30 07:46 GMT   |   Update On 2022-11-30 07:46 GMT
  • 10-ந்தேதி தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
  • பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நவகிரக தலங்களில் ஒன்றான ராகு தலமான நாகநாத சாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இ்ந்த கோவிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா 2-ந்தேதி(வௌ்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினசரி காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி 5 தலை நாக வாகனம், பூத வாகனம், சிம்ம வாகனம், கிளி, வெள்ளி ரிஷபம், யானை, அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.

10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7:30 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10-ம் நாள் பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் மங்கள வாத்தியங்கள் முழங்க வீதி உலா நடக்கிறது. பின்னர் பஞ்சமூர்த்திகள் சூரிய புஷ்கரணி முன்பு எழுந்தருளி தீர்த்தவாரி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் தா. உமாதேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News