வழிபாடு

திருப்புவனம் கொந்தகை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நாளை நடக்கிறது

Published On 2023-06-01 08:02 GMT   |   Update On 2023-06-01 08:02 GMT
  • சுவாமிக்கு விசேஷ தீபாராதனை நடக்கிறது.
  • இந்த கோவிலில் வழிபாடு செய்தால் திருமண தடைகள் நீங்கும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலை சார்ந்த உபகோவிலான சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் தெய்வநாயகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கொந்தகை கிராமமானது, பாண்டவர்களின் தாயாரான குந்திதேவி பெயரால் குந்தீ நகர் என அழைக்கப்பட்டிருக்கிறது.

திருவாய்மொழிப்பிள்ளை என்று பெயர் பெற்ற திருமலையாழ்வார் அவதாரத்தலம். வைணவ மரபின் முதன்மை ஆச்சாரியாரான மணவாளமுனிகள் தன் குருவான திருமலையாழ்வாரிடம் உபதேசங்களை கற்று தெளிந்தது இந்த தலத்தில் தான். எனவே இங்குள்ள பெருமாளை வணங்குபவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இந்த தலத்தின் பெருமாளை பூரம் நட்சத்திரத்தன்று வணங்கி வழிபடுபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கும், பதவி உயர்வுகள் கிட்டும் என்பது ஐதீகம்.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த மிகவும் பழமையான திருப்புவனம் கொந்தகையில் அமைந்துள்ள தெய்வநாயகப்பெருமாள் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் 10.15 மணி கடக லக்கனத்தில் ஸ்ரீபூமி, நீலாதேவி சமேத தெய்வநாயக பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அதை தொடர்ந்து சுவாமிக்கு விசேஷ தீபாராதனை நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு சுவாமியுடன் வீதி உலா நடக்கிறது.

இந்த தகவலை மீனாட்சி அம்மன் கோவில் துணை கமிஷனர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News