வழிபாடு

திருவந்திபுரம் தேவநாதசாமிக்கு கடலூர் சில்வர் கடற்கரையில் தீர்த்தவாரி நாளை நடக்கிறது

Published On 2023-03-06 05:57 GMT   |   Update On 2023-03-06 05:57 GMT
  • நாளை அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.
  • சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது.

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சாமி கோவில் உள்ளது. ஆண்டுதோறும் மாசிமகம் அன்று, தேவநாத சாமி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு தீர்த்தவாரிக்காக செல்வது வழக்கம். அதன்படி நாளை(செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணி அளவில் கோவிலில் விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் சாமிக்கு சிறப்பு சாற்றுமுறை மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து அதிகாலை 3 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி தங்க பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரைக்கு செல்கிறார்.

பின்னர் காலை 7:30 மணியளவில் கடற்கரையில் தேவநாத சாமிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு புதுப்பாளையம் ராஜகோபாலசாமி கோவிலுக்கு சாமி செல்கிறது. அங்கு விசேஷ பூஜை, மகா தீபாராதனை நடைபெறுகிறது. அதை தொடர்ந்து, தேவநாத சாமி மாலை 3 மணியளவில் ராஜகோபாலசாமி கோவிலில் இருந்து புறப்பட்டு 7 மணிக்கு மீண்டும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாசாமி கோவிலை வந்தடைகிறார்.

முன்னதாக நாளை காலை தேவநாதசாமி கோவிலில் இருந்து தீர்த்தவாரிக்கு சாமி புறப்பட்ட பின்னர், கோவில் நடை சாத்தப்பட்டு, மாலையில் சாமி திரும்ப வந்த பின்னர் கோவில் நடை திறக்கப்படும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News