வழிபாடு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில் தெப்பத்திருவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2023-02-07 03:55 GMT   |   Update On 2023-02-07 03:55 GMT
  • ஏராளமான பக்தர்கள் ஒம் நமச்சிவாய!என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்
  • தியாகராஜ சுவாமிகள் மாட வீதி உற்சவம் நடைபெற்றது.

திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று காலை தியாகராஜ சுவாமி மற்றும் சந்திரசேகர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை அலங்காரம் செய்யப்பட்ட சந்திரசேகர் சுவாமிகள், திரிபுர சுந்தரி ஆதிஷேச குளத்தில் தெப்பத்தில் எழுந்தருளினார்.

பின்னர் தெப்பகுளத்தில் உள்ள நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றி வந்தது. அப்போது குளத்தின் படிக்கட்டுகளில் இருந்த ஏராளமான பக்தர்கள் ஒம் நமச்சிவாய!என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். இரவு தியாகராஜ சுவாமிகள் மாட வீதி உற்சவம் நடைபெற்றது. தெப்பத்திருவிழாவில் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், பா.ஜ.க.மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News