வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செப்டம்பர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சண டோக்கன் வெளியீடு

Published On 2022-08-19 10:49 IST   |   Update On 2022-08-19 10:49:00 IST
  • செப்டம்பர் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்துக்கான (செப்டம்பர்) அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 22-ந்தேதி காலை 9 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

ஆனால் செப்டம்பர் மாதம் 27-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழாவையொட்டி அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் இதைக் கவனத்தில் கொண்டு அதற்கேற்ப அங்கப்பிரதட்சண டோக்கன்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags:    

Similar News