பிரம்மோற்சவ விழா 6-வது நாள்:அனுமன் வாகனத்தில் கோதண்டராமர் உலா
- சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
- இன்று சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9,30 மணிவரை அனுமந்த வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன் பிறகு உற்சவர்களான சீதா, லட்சுமணர், கோதண்டராமருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணிவரை யானை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவ விழாவின் 7-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடக்கிறது.