வழிபாடு
பிரம்மோற்சவ விழா 7-வது நாள்:சூரிய, சந்திரபிரபை வாகனங்களில் கோதண்டராமர் வீதிஉலா
- இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.
- இன்று இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சங்கு, சக்கரம், வில், அம்பு, கவுமோதகி, நந்தகம் வாள் ஆகிய பஞ்சாயுதங்களை ஏந்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைதொடர்ந்து இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி மோகன், கண்காணிப்பாளர் ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.