வழிபாடு
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா
- சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
- தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்குகிறது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில். தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த தலமாக விளங்கும் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி பிரம்மா மற்றும் தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்களுக்கு சிறப்பு யாகம் நாளை மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் கடம் புறப்பாடும், மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.
இரவு 11.27 மணிக்கு குருப்பெயர்ச்சி மகா தீபாராதனை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர்.