வழிபாடு

திருவெள்ளறை பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்

Published On 2022-08-09 07:02 GMT   |   Update On 2022-08-09 07:02 GMT
  • புண்டரீகாட்ச பெருமாள், பங்கஜவல்லி தாயாருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
  • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாட்சபெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி, நேற்று காலை ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஒரு தங்க குடம் மற்றும் 17 வெள்ளி குடங்களில் புனித நீர் யானை மீது வைத்து கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து திருவெள்ளறை குதிரை மண்டபத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோவிலுக்குள் எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு புண்டரீகாட்ச பெருமாள் மற்றும் பங்கஜவல்லி தாயாருக்கு புனித நீரால் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலை மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News