வழிபாடு

புதானூராதா புண்ணிய காலம் இன்று

Published On 2024-07-17 01:42 GMT   |   Update On 2024-07-17 01:42 GMT
  • புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
  • சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும்.

புதன்கிழமையும் அனுஷம் நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்து வரும் தினத்தை புதானூராதா புண்ணிய கால தினம் என்று சொல்வார்கள். இது விசேஷமான தினமாகும். இந்த புண்ணிய தினம் இன்று.

இந்த தினத்தை அட்சய திருதியை தினத்துக்கு சமமானதாக சொல்வார்கள். அதாவது இன்றைய தினம் நாம் ஒரு நல்ல செயலை செய்தால் அது பல மடங்கு பெருகி நமக்கு பலனாக வந்து கை கொடுக்கும் என்பது ஐதீகம்.

இந்த புண்ணிய தினத்தில் மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வது மிகவும் நல்லது. இன்று பெருமாள் ஆலயங்களுக்கு செல்லும்போது தயிர் சாதம் தயாரித்து ஊறுகாயுடன் சேர்த்து வைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தயிர் சாதம்-ஊறுகாயை ஆழ்வார்கள் சன்னதியில் வைத்து பக்தர்களுக்கு தானமாக கொடுக்கலாம்.

இந்த தானத்தால் குடும்பத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு நல்ல கல்வி அறிவு கிடைக்கும். சிலருக்கு சனி தோஷம் மிகவும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் இந்த புதானூராதா புண்ணிய கால வழிபாட்டை செய்தால் சனி தோஷத்தில் இருந்து சற்று ஆறுதல் பெறலாம்.

மேலும் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள் கிடைக்க செய்யும் ஆற்றலும் இந்த வழிபாட்டுக்கு உண்டு.

Tags:    

Similar News