வழிபாடு

தான் என்னும் அகந்தையை துரத்திய துளசி

Published On 2023-09-10 08:11 GMT   |   Update On 2023-09-10 08:11 GMT
  • கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார்.
  • ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள்.

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ விஷ்ணு தன்னை மார்பில் சுமந்து இருப்பதாலும் கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும் தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமை யாக்கிக்கொள்ள நினைத்தாள்.

இதற்காக கண்ணனை துலாபார தராசு தட்டின் ஒரு புறமும் மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாக வில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்தாள்.

அப்போது தராசு சமமாகியது. கண்ணன், புன் முறுவலுடன் நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந் திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து உண்மையான பக்தியுடன் என்னை சரண் அடைபவருக்கே நான் சொந்தம் என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

Tags:    

Similar News