வழிபாடு

உறையூர் அழகிய மணவாள பெருமாள் திருக்கல்யாண வைபவம்!

Published On 2023-06-08 08:51 GMT   |   Update On 2023-06-08 08:51 GMT
  • திருச்சி உறையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது.
  • இது தேவர்களுக்கும் அருள்பாலிக்கும் திருத்தலம்.

திருச்சி உறையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோவில் உள்ளது. பெயருக்கேற்றபடியே பெருமாள், கண்ணுக்கும் மனதுக்கும் இனியவராகவே காட்சியளிக்கிறார் நின்ற நிலையில் சேவை சாதிக்கும் திருக்கோலம் சங்கு சக்கராயுதம் தரித்த இறைவன் சக்கராயுதத்தைப் பிரயோகிக்கும் நிலையில் இருக்கும் கோலம், சோழ மன்னரின் திருமகளான கமலவல்லிக்கும்', அழகிய மணவாளப் பெருமாள் மீது அளவுகடந்த காதல்.

மணந்தால் பெருமாளைத்தான் மணப்பேன் என்று கூறி கடுமையான விரதம் பூண்டாள். தீவிரமாக தவம் செய்தாள். நாட்கள் செல்ல செல்ல விரதத்தின் வேகம் அதிகரித்தது. பலர் தடுத்தும் கேட்காமல் விரதம் எல்லை மீறிபோய்க் கொண்டிருந்தது. கமலவல்லியை இனியும் சோதிக்கக் கூடாது என்றெண்ணிய இறைவன் மனம் நெகிழ்ந்து கமலவல்லியை ஒரு பங்குனி உத்திரத் திருநாளான்று மணம் செய்து கொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்திரத்துக்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாத உத்சவமூர்த்தி வருகை தந்து மறுநாள் பங்குனி உத்திரத்தன்று அழகிய மணவாளப்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் கல்யாண உத்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இங்குள்ள கல்யாண தீர்த்தம், சூரிய புஷ்கரணி, குடமுருட்டி ஆறு- ஆகியவை இந்தக் கோவிலின் தீர்த்தங்களாகும்.

கோவில் விமானம் கல்யாண விமானம், எனப்படும். இது தேவர்களுக்கும் அருள்பாலிக்கும் திருத்தலம். தோஷம் காரணமாக திருமணமாகாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் விதிவசத்தால் பிரிந்து வாழும் தம்பதியர்களுக்கும் அனுக்கிரகம் அருளும் தலம். இத்தலத்துக்கு புதன், சனிக்கிழமைகளில் வந்து தரிசனம் செய்தால் மறுபிறவி இல்லை என்கிறார்கள்.

Tags:    

Similar News