வழிபாடு

பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்ததையும் படத்தில் காணலாம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் வெக்காளியம்மன்)

உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

Published On 2023-04-15 04:43 GMT   |   Update On 2023-04-15 04:43 GMT
  • பக்தர்கள் பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.
  • அக்னி சட்டிகளை ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்திபெற்றது திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 10 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மதியம் 12.15 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. இதில் திருச்சி மட்டும் இன்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றிலிருந்து பால் குடங்கள் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இதே போல் 100-க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டிகளை ஏந்தியவாறு வெக்காளியம்மன் கோவிலை வலம் வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Tags:    

Similar News