வழிபாடு

வடபழனி முருகன் கோவில் நவராத்திரி திருவிழா: கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்

Published On 2022-10-01 02:52 GMT   |   Update On 2022-10-01 02:52 GMT
  • கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது.
  • நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் 'சக்தி கொலு' என்ற பெயரில் 9 படிகள் கொண்ட பிரமாண்ட கொலு கோவிலின் 4 திசைகளிலும் வைக்கப்பட்டு உள்ளது. சக்தி கொலுவில் இதுவரை மீனாட்சி அம்மன் அலங்காரம், அன்னபூரணி அம்மன் அலங்காரம், அபிராமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு இருக்கிறது.

நவராத்திரி திருவிழாவின் 5-வது நாளான நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று கஜலட்சுமி அம்மன் அலங்காரத்தில் கொலு அமைக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்களின் இல்லத்தரசிகள் மற்றும் உபயதாரர்கள் இணைந்து சக்தி கொலுவை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். இதில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று கஜலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர்.

சக்தி கொலுவில் பக்தர்களின் கொலு பாட்டு, திருப்பூர் கிருஷ்ணனின் சொற்பொழிவு நடந்தது. நவராத்திரி திருவிழா வருகிற 4-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் செய்து உள்ளார்.

Tags:    

Similar News