வழிபாடு

கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவிலில் நவராத்திரி விழா 26-ந் தேதி வரை நடக்கிறது

Published On 2023-06-19 04:11 GMT   |   Update On 2023-06-19 04:11 GMT
  • வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன.
  • 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், உடன்குடி மற்றும் திசையன்விளைக்கு அருகில் உள்ள கொம்மடிக்கோட்டையில் வாலைகுருசுவாமி கோவில் உள்ளது. பாலாசேத்திரம் என அழைக்கப்படும் இக்கோவிலில் வராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் நடைபெற்று வரும் விழாக்களில் ஆனி மாதம் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழா முக்கியமான ஒன்றாகும்.

ஆஷாட நவராத்திரி காலம் என்பது சந்திரமான கால கணிதமுறையில் ஆனி மாதத்தில் தொடங்குகின்ற அமாவாசையை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். அந்த வகையில் குருசுவாமி கோவிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆஷாட நவராத்திரி விழா சிறப்பு அபிஷேகத்துடன் நேற்று தொடங்கியது. ஆஷாட நவராத்திரி நாட்களில் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடக்கின்றன. இந்த விழா வருகிற 26-ந்தேதி வரை நடக்கிறது.

குறிப்பாக 23-ந்தேதி பஞ்சமி திதி நாளில் வாராஹி அம்மனை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். இந்த நாளில் செய்யும் வேண்டுதல்கள் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்கின்றனர். ஆஷாட நவராத்திரி விழாவில் வாராஹி அம்மனுக்கு தினமும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கும்.

Tags:    

Similar News