வழிபாடு

வளம், நலம் தரும் வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

Published On 2024-10-06 01:44 GMT   |   Update On 2024-10-06 01:44 GMT
  • துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.
  • ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும்.

முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான விரத நாள் சதுர்த்தி ஆகும். மாதத்தில் வளர்பிறை, தேய்பிறை என இரண்டு சதுர்த்தி திதிகள் வருவதுண்டு.

இவற்றில் தேய்பிறையில் வரும் சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தி என சொல்வதுண்டு. இந்த நாளிலேயே பெரும்பாலானவர்கள் விநாயகரை விரதம் இருந்து, வழிபடுவது உண்டு. துன்பங்கள், தடைகள் நீங்க வேண்டும் என நினைப்பவர்கள் தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்யலாம்.

அதே சமயம் வாழ்க்கையில் வளம், நலம் பெருக வேண்டும், வளர்ச்சிகள் ஏற்பட வேண்டும், நன்மைகள் பெருக வேண்டும், மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என நினைப்பவர்களை விநாயகரை வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் வழிபடுவது சிறப்பானதாகும்.

அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து நான்கு நாட்களில் வரும் திதியை வளர்பிறை சதுர்த்தி. இந்நாளில் வீட்டில் பூஜை செய்து அருகில் உள்ள விநாயகர் சந்நதிக்கு சென்று விநாயகரை மனமுருகி வணங்கி வழிபட வேண்டும். அப்போது விநாயகரின் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். வழிபாடு முடிந்த உடன் ஆலயத்தை எட்டு முறை வலம் வர வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்து வர விநாயகப் பெருமானின் அருள் ஆசி கிட்டும்..

Tags:    

Similar News