வழிபாடு

திருச்செந்தூா் கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2023-02-08 08:19 GMT   |   Update On 2023-02-08 08:19 GMT
  • நாளை இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.
  • குமரவிடங்கபெருமான், தெய்வானை தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருகிறார்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. காலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும், காலை 8.30 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள், வள்ளி, தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு வருசாபிஷேகம் நடக்கிறது.

தொடா்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். இரவு மூலவருக்கு அபிஷேகம் நடைபெறாமல் புஷ்பாஞ்சலி நடக்கிறது.

கோவிலில் இரவு நடைபெறும் புஷ்பாஞ்சலிக்கு பக்தா்கள் தங்களால் இயன்ற அளவு அழகும், மணமும் மிக்க நன்மலா்களை (கேந்திப் பூக்கள் தவிர) நாளை பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக உள்துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News