வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரசாமி ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

Published On 2023-03-15 05:59 GMT   |   Update On 2023-03-15 05:59 GMT
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
  • சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மாசி மக திருவிழா நிறைவு பெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா கடந்த 13-ந்தொடங்கி நடைபெற்று வந்தது.. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது.

திருக்கதவு திறக்க அடைக்க பாடும் வரலாற்று திருவிழா, தேர் திருவிழா, தெப்பத் திருவிழா ஆகியவை நடந்தது.

தொடர்ந்து நேற்று இரவு விடையாற்றி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு மனோன்மணி சமேத சந்திரசேகரசாமிக்கு வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு கோவில் உள்ளே நடராஜர் சன்னதியில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது தேவார பாடலிலும், நாதஸ்வரத்திலும் நலுங்கு பாடல்கள் இசைக்கப்பட்டது. பிறகு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு மாசி மக திருவிழா நிறைவு பெற்றது.

இதில் யாழ்பாணம் வரணீ ஆதீன இளையவர் சபேசன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன், தேவார வார வழிபாட்டு மன்றத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News