வழிபாடு

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் மூலவருக்கு 9-ந்தேதி முதல் தைல காப்பு

Published On 2022-12-08 08:25 GMT   |   Update On 2022-12-08 08:25 GMT
  • முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசிக்க முடியும்.
  • 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.

108 வைணவ திருத்தலங் களில் ஒன்றாக திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.

தினந்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். அமாவாசை நாட்களில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி விட்டு சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்வது விஷேசம் ஆகும்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கோவிலில் உள்ள மூலவருக்கு தங்க கவசமும் தைலக் காப்பும் சாற்றுவது வழக்கம்.

இந்நிலையில் மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளுக்கு 6-ம்தேதி முதல் 8-ந் தேதி (இன்று) வரை தங்க கவசமும் சாற்றப்படுகிறது. வருகிற 9-ந்தேதி முதல் ஆங்கில வருட பிறப்பு 1-ந்தேதி 2023 வரை தைலக்காப்பு நடைபெறுகிறது.

இந்த தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும் முகம் மற்றும் பாதத்தை மட்டும் பக்தர்கள் தரிசித்துச் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News