வழிபாடு

ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி பூஜை

Published On 2022-08-30 08:00 GMT   |   Update On 2022-08-30 08:00 GMT
  • விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.
  • துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு எல்லா விநாயகர் கோவிலிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும். விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி ஹோமம் நடைபெறும்.

விக்கினங்கள் விலகவும், நன்மைகள் ஓங்கவும் இவைகள் செய்யப்படுகின்றன. இந்த ஹோமத்தில் 108 மூலிகைகள், வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கணபதி ஹோமத்திற்குரிய திரவியங்கள் எட்டு. அவை மோதகம், அவல், நெய்,பொரி, சத்துமா, கரும்பு, கொப்பரைத் தேங்காய், சுத்தமான எள், வாழைப்பழம், இதை தவிர அருகம்புல், விளாம்பழம், நாவல்பழம், மாதுளம்பழம் இவைகளையும் ஹோம நிவேதனமாக செய்ய வேண்டும்.

முதலில் தைலக்காப்பு, பிறகு மாகாப்பு (அரிசி மாவு) பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், பழ வகைகள், தயிர், கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீர் அபிஷேகங்கள் செய்யப்படும். மாலையில் விநாயகருக்கு சந்தனக்காப்பு, விபூதிக்காப்பு, பூவலங்காரம் நடைபெறும். துளசி இலைகள் விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் பூஜைக்கு உகந்தது.

Tags:    

Similar News