விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் ஆடிப்பூர விழா தொடங்கியது
- 21-ந்தேதி மகா சண்டி யாகம் நடைபெறும்.
- 22-ந்தேதி ஆடிப்பூர விழா நடைபெறும்.
சிவகங்கை பஸ் நிலையம் அருகே விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா 10 நாட்கள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக திருவிளக்கு பூஜை, பகவதி பூஜை, மகா சண்டியாகம் ஆகியவை நடைபெறும். இந்த ஆண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், துர்கா ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. 22-ந்தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக 18-ந்தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, 19-ந்தேதி மாலையில் பகவதி பூஜை, 20-ந்தேதி மாலை மாணவர்களுக்கான சிறப்பு பூஜையும், 21-ந்தேதி மகா சண்டி யாகமும் நடைபெறும்.
22-ந்தேதி ஆடிப்பூர விழா நடைபெறும். அன்று இரவு விஷ்ணு துர்க்கை அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். இரவு சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக தலைவர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.