வழிபாடு
null

ஆடி மாதத்திற்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு? - வெற்றிலை பிரசன்ன ஜோதிடர் முத்துக்குமார் சொல்வது என்ன?

Published On 2024-07-02 09:42 GMT   |   Update On 2024-07-03 06:59 GMT
  • கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும்.
  • சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

கடகத்தில் சூரியன் இருக்கும் காலமே ஆடி மாதம் ஆகும். சித்திரை மாதத்தில் சூரியன் இருக்கிறார் என்றால் அடுத்தடுத்த மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் சூரியன் பிரவேசித்துக்கொண்டு இருப்பார்.

இதில் நான்காவதாக இருக்கும் கடகத்திற்கு வருகிறார். அது சந்திரனின் இடம். இது அம்பாளுக்கு உரிய இடம். அம்பாள் தவம் இருந்து சிவனை அடைந்த இடமாகவும், சிவன் போய் சேரும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவியான சிவன் பார்வதியும் ஒன்றுசேரும் மாதம் ஆடி மாதம் ஆகும்.

ஆனால் நம் முன்னோர்கள் கணவன் மனைவி சேரக்கூடாது என்று கூறிவைத்துள்ளார்கள். இதில் பகுத்தறிவான விஷயம் என்னவென்றால் ஆடி மாதத்தில் கருத்தரித்தால் சித்திரை வெயில் காலத்தில் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் வெயில் காலம் என்பதால் நம் முன்னோர்கள் இதனை கூறி வைத்துள்ளனர்.

ஆடி மாதத்திற்கு உள்ள சிறப்புகள்:

ஆடி மாதத்தில் தான் தட்சாயணம் காலம் ஆரம்பிக்கிறது.

குழந்தை பாக்கியம், திருமணத்தடை, தொழில் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு வெற்றிழை வைத்து பிரசன்னம் பார்ப்போம். வெற்றிலை வைத்து பார்க்கும் போது இதில் 5-வதாக வைத்த வெற்றிழை கிழிந்து இருந்தால் அது குழந்தை பாக்கியம் பிரச்சினை. இதற்கு சிறந்த தீர்வு குலதெய்வ வழிபாடு தான்.

ஆடிமாதம், பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவிட்டு கோவிலில்  11 பேரிடம் மடிப்பிச்சை எடுக்க வேண்டும்.

என் வம்சம் தழைக்க என் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் குலதெய்வ கோவிலில் குறைந்தது 6 மணிநேரமாவது உட்கார்ந்து விட்டு வர வேண்டும்.

மேலும் பித்ருக்கள் சாபம் இருந்தாலும் குழந்தை பாக்கியம் தடைபடும். அப்போது பித்ருக்களுக்கு உகந்தது ஆடி அமாவாசை. யாரெல்லாம் முன்னோர்களுக்கு கொல்லி வைத்தார்களோ அவர்கள் எல்லாம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கலாம். ஆடி அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் அளிக்கும் போது பித்ருக்கள் சாபம் நீங்கி வம்சம் தழைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வமே தெரியாதவர்கள் என்னசெய்வது?

முதலில் விநாயகர் வழிபாடு செய்யலாம். வெற்றிலை பிரசன்னத்தில் குலதெய்வத்தை கண்டுபிடிக்கலாம்.

தர்ப்பணம் பெண்கள் கொடுக்கலாமா?

எள், தண்ணீர் இரைக்கும் செயலை சுமங்கலிகள் செய்யக்கூடாது. பெண்கள் சுமங்கலியாக இருக்கும் பட்சத்தில் தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. அதற்கு பதிலாக மருமகன்கள் இதனை செய்யலாம். யாருமே தர்ப்பணம் கொடுக்க இல்லை என்றாலும், தர்ப்பணம் கொடுப்பதற்கு ஒரு பிராமணன் இருப்பார். அவரிடம் சென்று தர்ப்பணம் கொடுக்க சொல்லலாம்.

திருமணத்தடை நீங்க ஆடி மாதத்தில் எந்த அம்மனை வணங்கலாம்?

சிவனும், அம்பாளும் சேர்ந்த ஒரு அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம் இந்த மாதத்தில் பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திருமணத்தடை இருந்தால். முத்துமாரி அம்மன், காமாட்சி அம்மன் அல்லது அவர்கள் ஊரில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று நெய்விளக்கு ஏற்றி வழிபட்டு வரலாம். செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மல்லிகைப்பூ போட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபடலாம். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

யாருடைய வீட்டிலாவது பெண்கள் கல்யாணத்திற்கு முன் இறந்துவிட்டார்கள் என்றால் அவர்களை கன்னி தெய்வம் என்று சொல்வார்கள். இவர்களை வழிபடுவதற்கென்று ஒரு முறை உள்ளது. அந்த முறைப்படி கும்பிட்டு வந்தால் திருமண வாழ்க்கை கூடிவரும்.

ஆறுபடை வீடுகளில் ஏதாவது ஒரு வீட்டிற்கு சென்று முருகனுக்கும், அம்மனுக்கு மாலை போட்டு சாமி கும்பிட்டுவிட்டு அந்த மாலையை திருமணத்தடை உள்ளவர்கள் மாலையை போட்டு வழிபட்டு விட்டு அந்த மாலையை வீட்டிற்கு கொண்டுவர வேண்டும். கல்யாணம் கைகூடியவுடன் இரண்டு மாலையாக முருகனுக்கு செலுத்திவிட வேண்டும்.

ஆடி மாதத்தில் ஏன் திருமணம் நடத்தப்படுவதில்லை?

ஆடி மாதத்தில் லக்கணமும், கோச்சார பலனும் நன்றாக இருப்பதில்லை என்பதினால் திருமண காரியங்களை செய்வதில்லை. சர ராசி, சிர ராசி, உபய ராசி என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு உபய ராசியில் சந்திரன் இருக்கும் காலக்கட்டத்தில் புதுமனை புகுவிழா செய்யக்கூடாது. அதுபோல ஆடி மாதத்தில் தெய்வத்திற்காக மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

அம்மனுக்கு அளிக்கப்படும் நைவேத்தியங்கள்?

பொதுவாக ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சி இருக்கும். சர்க்கரை பொங்கல், பால் பாயாசம் இதனை நைவேத்தியம் செய்யலாம். மனமுருகி வழிபட்டாலும் தெய்வ அனுக்கிரகம் இருக்கும்.

Full View


Tags:    

Similar News