வழிபாடு

துணை ஜனாதிபதி சந்திரபாபு நாயுடு விஷ்ணு சிலையை திறந்து வைத்த காட்சி.

ஐதராபாத்தில் உலகில் பெரிய விஷ்ணு மரசிலை பிரதிஷ்டை: அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார்

Published On 2023-07-03 08:05 GMT   |   Update On 2023-07-03 08:44 GMT
  • சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டது.
  • இந்த சிலை 21 அடி அகலம், 8.5 அடி உயரம் கொண்டது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே மரத்திலான உலகின் மிகப்பெரிய அனந்த சயன ஸ்ரீ மஹா விஷ்ணு மர சிலையை வடிவமைத்து கோவிலுக்கு வழங்கியது.

21 அடி அகலம், 8.5 அடி உயரம் கொண்ட இந்த சிலை உலகிலேயே மிகப் பெரிய விஷ்ணு மர சிலையாகும்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. மியான்மர் நாட்டில் 3 ஆண்டுகளாக இதனை செய்துள்ளனர்.

சிலை முழுவதும் வடிவமைத்த பின்னர், சிலை அமைப்பாளர்கள் மகாவிஷ்ணு சிலையை அயோத்தி ராமர் கோவிலுக்கு கொண்டு சென்று பூஜைகள் செய்தனர்.

இந்த மஹாவிஷ்ணு சிலையை முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு திறந்து வைத்தார். அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது.

நமது நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

மதம் என்பது தனிப்பட்டது, கலாசாரம் என்பது அனைவருக்கும் உரியது என வெங்கய்யா நாயுடு கூறினார்.

Tags:    

Similar News