null
இளம் வயதிலேயே பெண்களுக்கு முடி உதிர காரணம் என்ன?
- பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.
- மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன.
பெண்களுக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வது அதிகமாக காணப்படுகிறது.
இதுகுறித்து தனியார் நிறுவனம் ஒன்று 2.8 லட்சம் பெண்களிடம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 71.19 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்வது கண்டறியப்பட்டது.
36 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் 51 சதவீதம் பேர் முடி உதிர்தல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல்வேறு துறைகளில் வேலை செய்து வருகின்றனர்.
வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகங்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக திணறும் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். பெண்களில் பெரும்பாலானோர் முடி உதிர்வதை பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர்.
பொடுகு, ரத்தசோகை, ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் பிரசவத்திற்கு பிறகான பிரச்சனைகள், தூக்கம் இன்மை போன்றவையும் பெண்கள் முடி உதிர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மன அழுத்தம் காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, நொறுக்கு தீனிகள் அதிக அளவில் சாப்பிடுவது, புகைப்பிடித்தல் மற்றும் மது பழக்கம் ஆகியவை முடி உதிர்வை மோசமாக்குகின்றன.
நொறுக்கு தீனி கட்டுப்பாடு மிகவும் அவசியம். தின்பண்ட பிரியர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
முடி உதிர்வை தடுக்க உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துடன் தினமும் 30 நிமிடம் 45 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா செய்ய வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். இசையை கேட்க வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி கொள்வதன் மூலம் முடி உதிர்தல் பிரச்சனையை தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளனர்.