வணிகம் & தங்கம் விலை

பிரபல செல்போன் 'சிப்'கள் இந்தியாவில் உற்பத்தி

Published On 2024-11-24 04:48 GMT   |   Update On 2024-11-24 04:48 GMT
  • சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
  • இந்தியாவில் ‘மீடியாடெக்‌’ நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.

தைவான் நிறுவனத்தின் செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமாக 'மீடியாடெக்' உள்ளது. அமெரிக்கா செல்போன் சிப் தயாரிப்பு நிறுவனமான 'குவால்கோம்'க்கு போட்டியாக மீடியாடெக் உள்ளது.

அண்மையில் பிரபல கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான 'நெவடியா' உடன் இணைந்து சிப் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக 'மீடியாடெக்' அறிவித்து உள்ளது. இதனால் சர்வதேச பங்கு சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

தென்கொரியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் சிப் தயாரிப்பு ஆலைகளை கொண்டுள்ளது. இந்தநிலையில் இந்தியாவில் 'மீடியாடெக்' நிறுவனத்தின் தொழிற்சாலை விரைவில் தொடங்கப்படும் என அதன் துணை தலைவர் பின்பார் மோகியான் தெரிவித்துள்ளார்.

Similar News