மினிடெம்போ கவிழ்ந்து 15 பெண்கள் காயம்
- ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
- மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த 15 பெண்களும் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த 15 பெண்கள் வழக்கம்போல் இன்று காலை கோரைக்காடு பகுதியில் வெங்காயம் அறுவடை செய்வதற்காக மினிடெம்போவில் புறப்பட்டனர்.
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த மல்லிகா (40), லாவண்யா (19), சத்யா (30), ஜீவா (30) உள்பட 15 பெண்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக முகம், கை, கால், உள்ளிட்ட இடங்களில் அவர்கள் அடிபட்டது. அக்கம் , பக்கத்தினர், அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.