உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் கல்வி கண்காட்சி

Published On 2022-11-05 13:34 IST   |   Update On 2022-11-05 13:34:00 IST
  • மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.
  • தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளியில் சாம்டெக் -2022 என்னும் தலைப்பில் மாபெரும் கல்விக் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது.

கண்காட்சிக்கு பள்ளி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அசோக் முன்னிலை வகிக்க கல்விக் கண்காட்சியை பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் ஓசூர் அதியமான் அறக்கட்டளை ஆலோசகரான முத்துச் செழியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவியல், வணிகம், தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், கணிதம், கணினி அறிவியல் துறை சார்ந்த கண்டுப்பிடிப்புகள், தொழில் நுட்ப மாதிரிகளும் கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.

பெற்றோர், பொதுமக்கள் மற்றும் மற்ற பள்ளி மாணவ, மாணவியர் 2 நாட்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் அசோக், துணை முதல்வர் இம்மானுவேல் செல்வம் மற்றும் அனைத்து துறை ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News