செய்திகள்
தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு: வானிலை மையம்
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
பொதுவாக, தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும். வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த பருவமழை பொய்த்துவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாமல் ஏமாற்றிவிட்டது.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி சென்னை அருகே கரையை கடந்த ‘வார்தா புயலால்’ சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் அதிக மழை பெய்யாவிட்டாலும், ஓரளவு மழை பெய்தது. ஆனால் புயலால் இதுவரை 3 மாவட்டங்களும் கண்டிராத பலத்த காற்று வீசியது. வார்தா புயலால் மழை பெய்யும், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுமக்கள் சந்தோஷத்தில் இருந்தனர்.
ஆனால் அந்த புயலால் மக்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டு பெரும் பொருளாதார சேதம் மட்டுமே வந்தது. அதன்பின்பு வானிலையில் எந்த விதமான ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, அதே இடத்தில் தொடர்ந்து நீடிப்பதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். தமிழகத்தை பொறுத்தமட்டில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வட தமிழக கடலோர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்த அளவு 22 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவும். வடகாற்று தெற்கு நோக்கி வீசுவதால் பனிபொழிவு அதிகமாகவே காணப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.