செய்திகள்

தென்காசி அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலி

Published On 2016-12-30 08:18 GMT   |   Update On 2016-12-30 08:18 GMT
தென்காசி அருகே வி‌ஷம் குடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

தென்காசி அருகே உள்ள ஆய்குடியை அடுத்த அகரக்கட்டைச் சேர்ந்தவர் பண்டாரம் (வயது 63), விவசாயி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இவர் மனைவி சின்னத்தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

ஆனால் அவரது மனைவி பணம் கொடுக்க மறுத்து சத்தம் போட்டுள்ளார். இதில் மனம் உடைந்த பண்டாரம், வி‌ஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை பாளை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் நேற்று சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து ஆய்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News