செய்திகள்
நாகர்கோவிலில் 6-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்: நாஞ்சில் சம்பத் பேசுகிறார்
நாகர்கோவிலில் 6-ந் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் காரவிளை செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நாகர்கோவில் செட்டிக்குளத்தில் வருகிற 6-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழாவுக்கு நான் (காரவிளை செல்வன்) தலைமை தாங்குகிறேன்.
நகர செயலாளர் சந்திரன், பேரவை இணை செயலாளர் லெட்சுமணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் இ.என். சங்கர், மாணவர் அணி துணை செயலாளர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். வக்கீல் பிரிவு இணை செயலாளர் முருகேஸ்வரன் வரவேற்கிறார்.
கூட்டத்தில் செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், விஜயகுமார் எம்.பி., முன்னாள் அமைச்சர் பச்சைமால் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்கள்.
ஜெயகோபால் நன்றி கூறுகிறார். கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக, அனைத்து அணி நிர்வாகிகள், கூட்டுறவு பிரதிநிதிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.