செய்திகள்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அனுமதி

Published On 2017-10-02 04:50 GMT   |   Update On 2017-10-02 04:50 GMT
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை:

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் திடீரென்று அவருக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது உதவியாளரிடம் கேட்டபோது கூறியதாவது:-

அமைச்சர் எஸ்.பி.வேலு மணி ஒவ்வொரு மாதமும் ஆஸ்பத்திரியில் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். வழக்கமாக அவர் கோவையில் இருக்கும் போது அங்குள்ள மருத்துவ மனையில் பரிசோதனை செய்து கொள்வார். தற்போது சென்னையில் இருப்பதால் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News