செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
கிருமாம்பாக்கத்தில் கூலித்தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஏழுமலை, (வயது52). கூலித்தொழிலாளி. இவருக்கு மாயம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாயம்மாள் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஏழுமலை தவறி விழுந்ததில் அவருக்கு கழுத்தில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் ஏழுமலைக்கு கழுத்து வலி இருந்து வந்தது. இதனால் அவர் கடும் அவதி அடைந்து வந்தார்.
நேற்று மாலை ஏழுமலைக்கு கழுத்துவலி அதிகமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏழுமலை தனது மனைவி மாயம்மாளிடம் தெரிவித்தார். அவர் காலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு இரவு ஷிப்டு பணிக்கு சென்று விட்டார்.
இதனால் மனமுடைந்த ஏழுமலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் ஜன்னலில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.