இந்தியா

குஜராத்தில் கட்டப்பட்டு வரும் புல்லட் ரெயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து

Published On 2024-11-05 15:30 GMT   |   Update On 2024-11-05 15:30 GMT
  • மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும்.
  • புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மும்பை-அகமதாபாத் இடையே இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 14, அன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே ஆகியோரால் இந்த திட்டத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரெயில் வழித்தடத்தின் மொத்த நீளம் 508 கிமீ ஆகும். இதில் 348 கிமீ குஜராத்திலும் 156 கிமீ மகாராஷ்டிராவிலும் அடங்கும். மணிக்கு 320 கிமீ வேகத்தில் செயல்படக்கூடிய புல்லட் ரெயில் மும்பை- அகமதாபாத் இடையேயான தூரத்தை வெறும் இரண்டு மணி நேரத்தில் கடக்கும்.

இந்த புல்லட் ரெயில் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள மாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒருபகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 தொழிலாளர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 


Tags:    

Similar News