இந்தியா

கிழக்குப் பகுதியை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறேன் - பிரதமர் மோடி

Published On 2024-11-24 16:31 GMT   |   Update On 2024-11-24 16:31 GMT
  • இந்தியாவின் கலாச்சார செழுமையில் முக்கிய பங்கு வகித்தது.
  • நான்கு கதவுகளும் இப்போது திறந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

டெல்லியில் நடைபெற்ற "ஒடிசா பர்பா" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியாவின் கிழக்குப் பகுதி நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக கருதுகிறேன், முன்பு இந்தப் பகுதி பின்தங்கிய ஒன்றாக கருதப்பட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புதிய அரசு அமைந்த 100 நாட்களுக்குள் ஒடிசா மாநிலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஒடிசா எப்போதுமே தீர்க்கதரிசி மற்றும் அறிஞர்களின் நிலமாக இருந்து வருகிறது. இங்குள்ள அறிஞர்கள் நமது மத நூல்களை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் சென்று, பொதுமக்களை அவற்றுடன் இணைத்த விதம், இந்தியாவின் கலாச்சார செழுமையில் முக்கிய பங்கு வகித்தது."

"இந்தியாவின் கிழக்குப் பகுதியும், அங்குள்ள மாநிலங்களும் பின்தங்கியவை என்று ஒரு காலத்தில் இருந்தது. இருப்பினும், கிழக்குப் பகுதியை நாட்டின் வளர்ச்சி இயந்திரமாக நான் கருதுகிறேன். அதனால்தான் இப்பகுதியின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளோம். ஒடிசாவிற்கு நாங்கள் இப்போது ஒதுக்கும் பட்ஜெட் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மூன்று மடங்கு அதிகம்."

"ஒடிசாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையிலும் நாங்கள் வேகமாக பணியாற்றி வருகிறோம். மேலும் இந்த ஆண்டு பட்ஜெட் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற்றது. உச்சிமாநாட்டின் போது, சூரிய கோவிலின் புகைப்படத்தை காட்சிப்படுத்தினோம். ஜெகநாதர் கோவிலின் நான்கு கதவுகளும் இப்போது திறந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." 

Tags:    

Similar News