இந்தியா

இனி இடைத்தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாது - மாயாவதி திட்டவட்டம்

Published On 2024-11-24 10:08 GMT   |   Update On 2024-11-24 10:08 GMT
  • உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி.
  • முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன.

பகுஜன் சமாஜ் கட்சி இனிவரும் காலங்களில் இடைத்தேர்தல்களில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி இன்று தேர்தல் ஆணையம் போலி வாக்குகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை நாட்டில் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது என்று அறிவித்தார்.

இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், " உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.

முன்னதாக, முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன, இப்போது அதேபோன்ற நடவடிக்கைகள் EVMகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இது ஜனநாயகத்திற்கு கவலையும் வருத்தமும் அளிக்கிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்குப்பதிவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, நாங்கள் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News