செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து ரூ.86 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் ரெயில் மூலம் சென்னை வந்தது

Published On 2018-07-26 22:55 GMT   |   Update On 2018-07-26 22:55 GMT
தூத்துக்குடியில் இருந்து 210 பணப்பெட்டிகள் மூலம் ரூ.85 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சென்னை கொண்டுவரப்பட்டன.
சென்னை:

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இந்த பணம் ரெயில் மூலம் அருகில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு கொண்டு செல்லப்பட்டன.

நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு பழைய ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டன. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் பலத்த பாதுகாப்புடன் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தன. பின்னர் வேன் மூலம் ரிசர்வ் வங்கி கிளைக்கு அதிகாரிகள் அவற்றை கொண்டு சென்றனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தூத்துக்குடியில் இருந்து 210 பணப்பெட்டிகள் மூலம் ரூ.85 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரம் மதிப்புள்ள பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன. இந்த பணப்பெட்டிகள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி கிளையில் ஒப்படைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News